Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

மதுரை வடக்கு தொகுதி பாஜக தேர்தல் அறிக்கை :

மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன், தனது தொகுதிக்கான சிறப்புத் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை வடக்குத் தொகுதிக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பெற்றுத் தரப்படும். 4 புகார் நிலையங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களிடம் பெறப்படும் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். மாதம்தோறும் இலவச மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும். மதுரை வடக்குத் தொகுதி முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x