Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

சிவகங்கை மாவட்டத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் :

காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கொப்புடையம்மன் கோயில் அருகிலும், காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முத்துமாரி யம்மன் கோயில் அருகேயும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரைமாணிக்கம் பெரியார் சிலை அருகேயும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் காரைக்குடியில் தேவகோட்டை ரஸ்தா கிடங்கு அருகிலும், அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி தேவகோட்டை தியாகிகள் பூங்காவிலும் இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் காந்தி சிலை அருகேயும், திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் அண்ணா சிலை அருகேயும், அமமுக வேட் பாளர் கே.கே.உமாதேவன் கீழச்செவல் பட்டியிலும் இறுதிக் கட்ட பிரச் சாரத்தை முடித்தனர்.

சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் சிவன்கோயில் அருகேயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அரண்மனை வாசலிலும், அமமுக வேட்பாளர் அன்பரசன் பேருந்து நிலையம் அருகேயும் பிரச்சாரத்தை முடித்தனர்.

மானாமதுரை அதிமுக வேட்பாளர் நாகராஜன் திருப்பு வனத்தில் நரிக்குடி முக்கு பகுதியிலும், திமுக வேட்பாளர் தமிழரசி இளையான்குடி பஜா ரிலும், அமமுக வேட்பாளர் மாரியப்பன்கென்னடி மடப்புரம் விலக்கிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகபிரியா திருப்புவனம் புதூர் பகுதியிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவசங்கரி மானாமதுரை பழைய பேருந்துநிலையம் அருகேயும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x