Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

மதுரை மாவட்டத்தில் - 10 தொகுதியிலும் விறுவிறுப்புடன் பிரச்சாரம் நிறைவு :

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தி, திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் ஆகிய 10 தொகுதிகளிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.

மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், பைக்காரா, கோச்சடை பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். திமுக வேட்பாளர் சின்னம்மாள் சோலையழகுபுரம், பள்ளம், மீனாட்சி திரையரங்கு பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் ஒத்தக்கடை அருகே ராஜ கம்பீரத்தில் உள்ள அய்யணன் அம்பலம் நினைவிடத்தில் மாலை அணிவித்தார். பின்னர் நரசிங்கப் பெருமாளை வழிபட்டு விட்டு திறந்தஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

திமுக வேட்பாளர் மூர்த்தி எம்எல்ஏ ஒத்தக்கடையில் பிரச்சா ரத்தை நிறைவு செய்தார்.

அமமுக வேட்பாளர் தங்க. சரவணன், மக்கள் நீதி மய்யம் வேட் பாளர் முத்துக்கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி லதா ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ். சரவணன் தெப்பக்குளம், சிமெண்ட் ரோடு பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் ஆழ்வார்புரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார். அவருடன் வைகோவின் மகன் துரை வையாபுரி உடன் சென்றார்.

வடக்குத் தொகுதியில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் மருத்துவர் சரவணன் புதூர், அண்ணாநகர், கே.கே.நகர், மேலமடை பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அமமுக வேட்பாளர் ஜெயபால் செல்லூர், மீனாட் சிபுரம், கிருஷ்ணாபுரம் காலனி, மேலமடை, அண்ணாநகர் பகு தியில் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டினார்.

மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியா கராஜன், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமுத்து ராம லிங்கம் ஆகியோரும் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது மகள் பிரியதர்ஷினி மற்றும் நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் கள் சந்தைப்பேட்டையில் தொடங்கி, ராஜாஜி சிலை வரை நடைபயணமாகச் சென்று வாக்கு சேகரித்தனர். திமுக வேட்பாளர் மணிமாறன், முன்னாள் எம்எல் ஏக்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான் உள்ளிட்டோர் தெற்குத் தெருவில் தொடங்கி 1 கி.மீ. நடந்துசென்று பிரச்சாரம் செய்தனர்.

இதேபோல , திருப்பரங்குன்றம், சோழவந்தான், மேலூர், உசில ம்பட்டி தொகுதிகளிலும் இறுதிக் கட்ட பிரச்சாரம் மும்முரமாக நடந் தது.

10 தொகுதிகளிலும் வெளியூர் ஆட்கள் இருக்கிறார்களா எனக் கண்காணிக்க பறக்கும் படையினர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறலைத் தடுக்க உள்ளூர் போலீஸாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x