வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தி கண்காணிப்பு :

வாக்குப்பதிவை கண்காணிக்க சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.                                     படம்: எஸ். குரு பிரசாத்
வாக்குப்பதிவை கண்காணிக்க சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். படம்: எஸ். குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்குப்பதிவுக்கு தேவையான நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 11 தொகுதிகளிலும் உள்ள 4,280 வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரும் வகையில், மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் 2,145 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, வாக்காளர்கள் காத்திருக்கும் இடம், வாக்குச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமர்ந்துள்ள இடம், வாக்குச்சாவடியின் வெளிப்பகுதி என தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in