100 சதவீதம் வாக்களிக்க கடலூரில் விழிப்புணர்வு :

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில்  மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் 100 சதவீதம்   வடிவமைப்பில்  வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் 100 சதவீதம் வடிவமைப்பில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Updated on
1 min read

கடலூர் அண்ணா விளையாட் டரங்கத்தில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் 1500-க்கும்மேற்பட்டோர் ஒன்றிணைந்து 100 சதவீதம் வடிவமைப்பை உருவாக்கி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து தவறாது வாக்களிப்போம் என்ற உறுதி மொழிமாவட்ட தேர்தல் அலுவலர்சந்திரசேகர் சாகமூரி தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் "ஒரு விரல் புரட்சி' என்ற பாடல் குறுந்தகட்டு வெளியிடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, திட்ட அலுவலர்கள் செந்தில்வடிவு, பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் மாவட்டத்தின் வட்டத் தலைநகரங்களிலும், அடுத்து வரும் நாட்களில் 100 சதவீத வாக்களிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திட மாவட்ட தேர்தல் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

வட்டத் தலைநகரங்களி லும், விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திட மாவட்ட தேர்தல் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in