முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ. 45,430 அபராதம் வசூல் :

முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ. 45,430 அபராதம் வசூல்  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் சமீரன் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதம் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து மார்ச் மாதம் ரூ.45,430 அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் கரோனா தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவ மனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ள அனைவரும் கண்டிப்பாக மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையின்றி காய்ச்சல் மருந்து வழங்கக் கூடாது” என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in