

விக்கிரவாண்டி அருகே பனைமர தொழிலாளர்கள் போலீஸாரை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கனூர், பூரிகுடிசை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட பனைமர தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கோடை காலங்களில் பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்கி பனைவெல்லம் தயாரிப்பது இவர்களுடைய தொழிலாகும். அந்தவகையில் பதநீர் இறக்கும் தொழிலாளர்களை, கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி போலீஸார் கைதுசெய்து கள்ளச்சாராய வழக்கு பதிவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதே போல் நேற்று முன்தினம் கஞ்சனூர் போலீஸார் 5 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து நேற்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பனைமர தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.