கடலூரில் அதிமுகவினர் - திமுக வேட்பாளருக்கு எதிராக தேர்தல் அலுவலரிடம் புகார் :

கடலூரில் அதிமுகவினர் -  திமுக வேட்பாளருக்கு எதிராக தேர்தல் அலுவலரிடம் புகார் :
Updated on
1 min read

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் மீண்டும் போட்டியிடுகிறார். திமுகசார்பில் முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று மாலையில் அதிமுக கடலூர் நகர செயலாளரும், வேட்பாளரின் பொது முகவருமான ஆர்.குமரன் தலைமையில் கடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ப.ஜெகதீஸ்வரனிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “திமுக வேட்பாளர் கோ.ஐயப்பன் கடந்த 29-ம்தேதியன்று தேவனாம்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அதிமுக வேட்பாளர் குறித்தும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் அவமானப்படுத்தி அவதூறான சொற்களை கூறியுள்ளார்.

மேலும்,வாக்கிற்கு அதிமுகசார்பில் பணம் கொடுக்கப் போவதாகவும் கூறி வேட் பாளர் மீது தவறானஅபிப்பிராயத்தை பொதுமக்களிடம் பரப்பி வருகிறார். மேலும், வாக்காளர் களை தரக்குறைவாக மதிப்பிட்டு கண்ணியக்குறைவான வார்த்தை களையும் பயன்படுத்தி உள்ளார்.

திமுக வேட்பாளரின் பரப்புரை யின் அம்சங்கள் தேர்தல் விதி முறைகளின் படி தனிநபர் விமர்சனம் என்ற வகையில் வருவதால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுகுறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in