

பார்த்திபனூர் அருகே பரளை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவரது மனைவி லட்சுமி(55). இவர்களது பக்கத்து வீட்டுக்காரர் மருதுபாண்டி(32). திருமணமாகாத இவர் கூலி வேலை செய்து வருகிறார். சங்கிலி குடும்பத்துக்கும், மருது பாண்டி குடும்பத்துக்கும் வீட்டுக்குச் செல்லும் பாதை தொடர்பான பிரச்சினையில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 27.4.2014 அன்று லெட்சுமி வீட்டின் அருகே மருதுபாண்டி செல்லும்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மருதுபாண்டி தனது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து லெட்சுமியை வெட்டிக் கொலை செய்தார்.
மருதுபாண்டியை பார்த்திபனூர் போலீஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் இறுதி விசாரணையில் மருதுபாண்டிக்கு மகிளா நீதிபதி சுபத்ரா ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.