திருநெல்வேலி மாவட்டத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. முதியவர் ஒருவர் தபால் வாக்கு அளிக்கிறார். படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி மாவட்டத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. முதியவர் ஒருவர் தபால் வாக்கு அளிக்கிறார். படம்: மு.லெட்சுமி அருண்

நெல்லையில் முதியோருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம் :

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது.

மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதிவாய்ந்த 3,403 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதற்காக 109 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு நுண் பார்வையாளர், ஒரு காவல்துறை அலுவலர், ஒரு மண்டல அலுவலர், ஒரு மண்டல உதவியாளர், ஒரு வீடியோ கிராபர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்த வாக்குகளை அவர்களது வீடுகளுக்கே சென்று பாதுகாப்பு பெட்டிகளில் சேகரிக்கும் பணியை நேற்று தொடங்கினர். இந்த வாக்குப்பதிவு 3 நாட்கள் நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in