

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி, கடலூ ரில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிநவீன மின்னணு திரை கொண்ட வாகனத்தின் வாயிலாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறும்படங்கள் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே அரசுப் பேருந்து களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் தொடர்பான புகார்களை கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப் பாட்டு அறையை 04151-224155,224156,224157, 224158 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கிரன்குராலா மற்றும் எஸ்பி ஜியாவுல்ஹக் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
கடலூரில் தேர்தல் விழிப்புணர்வு