அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது : குறிஞ்சிப்பாடியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் பேச்சு

குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதி முக வேட்பாளர் செல்விராமஜெயம் நேற்று குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். எஸ்.புதூர், எஸ்என் நகர், தொண்டமாநத்தம், கோதண்டராமபுரம், சின்ன காட்டுசாகை, ஈச்சங்காடு, அணுகம் பட்டு, அரசாக்குப்பம் அகரம் உட் பட பல கிராமங்களில் ஓட்டு கேட்டார். அப்போது அவர் பேசியதாவது; அதிமுக ஆட்சியில் மக்க ளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் பழனிசாமி செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருந்த போது அவர்கள் எதுவும் மக்களுக்கு செய்யவில்லை. கடும் மின்வெட்டு நிலவியது. பின்னர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் மின் வெட்டு இல்லாத மின் மிகை மாநிலமாக மாறி இன்றுவரை அதுதொடர்ந்து வருகிறது. வீடுக ளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இனி150 யூனிட்டாக உயர்த்தி வழங் கப்படும். அதேபோல் முதியவர் உதவித் தொகை, திருமண உதவிதிட்டம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துவாக்குறுதிகளும் நிறைவேற்றப் படும். நான் சாதி, மத பாகுபாடுபார்க்க மாட்டேன். உங்கள் பிரச்சி னைகள் குறித்து சட்டமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று தெரிவித்தார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in