அழகர்கோவில், திருமோகூர் - பெருமாள் கோயில்களில் பங்குனி திருக்கல்யாணம் :

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருக்கல்யாணத்தின்போது கள்ளழகர் எனும் சுந்தரராஜ பெருமாள் 4 பிராட்டிமார்களுடன் அருள்பாலித்தார். (வலது) திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது காளமேகப்பெருமாள் 4 பிராட்டிமார்களுடன் அருள்பாலித்தார்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் திருக்கல்யாணத்தின்போது கள்ளழகர் எனும் சுந்தரராஜ பெருமாள் 4 பிராட்டிமார்களுடன் அருள்பாலித்தார். (வலது) திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது காளமேகப்பெருமாள் 4 பிராட்டிமார்களுடன் அருள்பாலித்தார்.
Updated on
1 min read

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் மார்ச் 25-ல் தொடங்கியது. முக்கிய வைபவமான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. சுந்தரராஜப் பெருமாளுக்கும், தேவி, பூமி தேவி, கல்யாண சுந்தரவல்லித் தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட் டிமார்களுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, நான்கு பிராட்டிமார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருக்கல்யாண நிகழ்ச்சி இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேற்று மாலை சுவாமி சப்பரத்தில் புறப்பாடாகி கோயிலுக்குள் சென்று சன்னதியில் எழுந்தருளினார். இன்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருமோகூர் காளமேகப் பெரு மாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. காளமேகப் பெருமாளுக்கும் தேவி, பூமிதேவி, மோகனவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களுக்கும் திருக்கல் யாணம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி 4 பிராட்டிமார்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் புஷ்பப் பல்லக்கில் மாட வீதியில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் நான்காம் நாளான இன்று தெப்ப உற்சவம் நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in