அண்ணாமலையை ஆதரித்து - அரவக்குறிச்சி தொகுதியில் ஏப்.1-ல் அமித்ஷா பிரச்சாரம் : பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தகவல்

அண்ணாமலையை ஆதரித்து -  அரவக்குறிச்சி தொகுதியில் ஏப்.1-ல் அமித்ஷா பிரச்சாரம் :  பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தகவல்
Updated on
1 min read

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணா மலையை ஆதரித்து ஏப்.1-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் தளவா பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி மார்ச் 30 மற்றும் ஏப். 2-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அப்போது அவர் தாராபுரம், மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 31-ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத் துக்காக தமிழகம் வருகின்றனர்.

இதேபோல, ஏப். 1-ம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பின், 2-ம் கட்டமாக மீண்டும் தமிழகம் வரும் அவர் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும். அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மக்கள் மனங் களை வென்றுவிட்டார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in