வாஞ்சியம், திருத்துறைப்பூண்டி கோயில்களில் சசிகலா வழிபாடு :

வாஞ்சியம், திருத்துறைப்பூண்டி கோயில்களில் சசிகலா வழிபாடு :
Updated on
1 min read

வாஞ்சியம், திருத்துறைப்பூண்டியில் உள்ள கோயில்களில் சசிகலா நேற்று சாமி தரிசனம் செய் தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்வதற்காக திருவாரூருக்கு நேற்று முன்தினம் இரவு வந்து, தனியார் ஹோட்டலில் தங்கினார். தொடர்ந்து, நன்னிலம் அருகே உள்ள வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் உள்ள எமதர்ம சுவாமியை சசிகலா நேற்று காலை தரிசனம் செய்தார். அதன் பின்னர், சகலபதி இரட்டை விநாயகர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார்.

அங்கிருந்து புறப்பட்ட சசிகலா, திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று அங்கு வழிபாடு செய்தார்.

பின்பு பிரகாரத்தை சுற்றி வந்த அவர், அங்கு தன்னுடன் படித்த பள்ளித் தோழிகள், சொந்த ஊரில் தன் வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர்கள் என சிலரை சந்தித்துப் பேசினார்.

அப்போது, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ரஜினிகாந்த், சசிகலாவை சந்தித்து சால்வை கொடுத்து, ஆசி பெற்றார். பின்னர் அவர் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in