வெள்ளக்காலங்களில் நேரில் வந்து ஆறுதல் கூறினார் - மக்களின் கஷ்டத்தில் தோள் கொடுப்பவர் முதல்வர் பழனிசாமி : புவனகிரி வேட்பாளர் அருண்மொழிதேவன் பிரச்சாரம்

புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Updated on
1 min read

முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக அதிமுகவுக்கு வாக் களியுங்கள் என்று புவனகிரி வேட் பாளர் அருண்மொழிதேவன் வாக் குசேகரித்தார்.

கடலூர் மேற்கு மாவட்ட அதி முக செயலாளரும், புவனகிரி தொகுதிஅதிமுக வேட்பாளருமான அருண்மொழிதேவன் நேற்று கீரப்பாளை யம் பகுதியில் உள்ள வீரசோழகன், செங்கல்மேடு, ஆடூர், பூங்குடி, பண்ணப்பட்டு, சிறுகாலூர், அய்ய னூர் அக்ராமங்கலம், விளாகம், சேதியூர், நார்த்தங்குடி, தரசூர், டி.நெடுஞ்சேரி, கொடியாளம், துணிசிரமேடு உள்ளிட்ட 20 கிரா மங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் அருண் மொழிதேவன் பேசியது:

முன்னாள் ஜெயலலிதா மாண வர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப், புத்தகம்,பிறந்த குழந் தைகளுக்கு பவுடர், சோப்பு உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார். இவைகள் எதையும் நிறுத்தாமல் தொடர்ந்து அனைத்தையும் முதல்வர் பழனிசாமியும் வழங்கி னார்.

தமிழகத்தில் கரோனா தாக் குதல் இருந்த போது ஸ்டாலின் போல வீட்டில் உட்கார்ந்து இருக் காமல், முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றுஆய்வு கூட்டங்கள் நடத்தி மக் களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய், ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வழங் கினார். முதல்வர் பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும்.

தமிழக மக்களை ஞாபக மறதி காரர்கள் என்று நினைத்துக் கொண்டு, 10 வருடத்திற்கு முன்னர் திமுகவினர் செய்த அராஜ கத்தை மறந்துவிட்டு, நாட்டை பாதுகாப்பேன், மகளிரை பாதுகாப்பேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். நம்முடைய கஷ்டத்தில் பங்கு எடுக்ககூடியவர், வெள்ளம் வந்த போதுகடலூருக்கு 2 முறை வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறியவர் முதல்வர் பழனிசாமி.

எனவே அவரை முதல்வ ராக்க எனக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in