கரோனா தடுப்பு: : தென்காசி ஆட்சியர் ஆலோசனை :

கரோனா  தடுப்பு:  : தென்காசி ஆட்சியர் ஆலோசனை  :
Updated on
1 min read

கரோனா, டெங்கு தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை வகித்து பேசும்போது, “கரோனா வைரஸ் பரவலை தடுக்க வருவாய்த்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதும், தனிமனித இடைவெளியை பின்பற்றாததும், முகக் கவசம் அணியாததும் கரோனா பரவ காரணம். கரோனா வழிகாட்டுதலை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். டெங்கு வைரஸ் பரவுவதை தடுக்க ஆங்காங்கே தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகளில் குளோரின் கலக்க வேண்டும்” என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் அருணா கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in