

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 18-ம் தேதி கொடியேற்றதுடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளாக 22-ம் தேதி இரவு கருட சேவை, 24-ம் தேதி மாலையில் தங்க புண்ணியகோடி விமானத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு சுவாமி தெய்வநாயகப்பெருமாளும், வரமங்கைத் தாயாரும் தங்கத்தேரில் எழுந்தருளினர். தேரோட்டத்தை, நாங்குநேரி வானமாமலை மடம் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார். அப்போது, நல்ல மழை பெய்தது. ஆனாலும், பக்தர்கள் தேரை தொடர்ந்து இழுத்து, நிலையம் சேர்த்தனர். மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இன்று காலை தீர்த்தவாரி, இரவில் வெற்றிவேர் சப்பரத்தில் திருவீதியுலா ஆகியவை நடக்கின்றன. அடுத்து, சித்திரை பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது.
திருக்குறுங்குடி
வரும் 31-ம் தேதி 5-ம் திருவிழாவன்று இரவில் இக்கோயிலில் உள்ள 5 பெருமாள்களும், 5 கருடவாகனங் களில் எழுந்தருளி சேவை சாதிப்பர். 1-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மேற்கு ரதவீதியில் வைத்து, ஸக்யாத்ரி எனப்படும் மேற்குதொடர்ச்சி மலைக்கு விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 5-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
தென் திருப்பேரை