

முதல்வர் மற்றும் அவரது தாயார் குறித்து இழிவாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் நேற்று புகார் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரது பேச்சைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜா என்பவர் நேற்று புகார் அளித்துள்ளார். அதில், ‘‘நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, தமிழக முதல்வர் பழனிசாமிமற்றும் அவரது தாயார் குறித்துஇழிவாகவும் பொதுமக்கள் மத்தியில் முதல்வரின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரி வித்துள்ளார்.