மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன் : நெய்வேலியில் சபா ராஜேந்திரன் பிரச்சாரம்

நெய்வேலி  தொகுதி திமுக வேட்பாளர் சபாராஜேந்திரன்  கீழ்மாம்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.
நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபாராஜேந்திரன் கீழ்மாம்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.
Updated on
1 min read

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சபா ராஜேந்திரன் நேற்று முத்தரசன்குப்பம், கீழ்மாம்பட்டு,சட்டமாம்பட்டு, புதுப்பாளையம், பத்திரகோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, வேகாக்கொல்லை, சிறுதொண்டமாதேவி, அரசடிகுப்பம், கானஞ் சாவடி, புறங்கணி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000, கரோனா பாதிப்பு நிவாரணம் ரூ.4,000, சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நான் உங்களில் ஒருவன் எந்த நேரமும் நீங்கள் என்னை சந்திக்கலாம், உங்களின் குறைகளை என்னிடம் நேரடியாக சந்தித்து கூறலாம். களத்தில் நின்று மக்களுக்காக உழைப்பேன். கோரிக்கைகள் அனைத்தும் தீர்த்து வைப்பேன் "என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in