சின்னங்களுடன் கூடிய - வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயாரிக்க நடவடிக்கை :

சின்னங்களுடன் கூடிய  -  வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயாரிக்க நடவடிக்கை  :
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய பட்டியல் அச்சிடும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டபோது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களது கட்சி சின்னங்களும், அதிக தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அனைத்து தொகுதியிலும் ஒரே சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ள 193 சின்னங்களில், அவரவர் விரும்பி தேர்வு செய்துள்ள சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நாளன்று பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய பட்டியலை பொருத்த சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணிகளில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதிக்கான சின்னங்களுடன் கூடிய பட்டியல் எவ்வளவு தேவை என்பதை கணக்கிட்டு, அதை சென்னை வள்ளலார் நகரில் உள்ள அரசு அச்சகத்தில் அச்சிட தேவையான நடவடிக்கையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in