

தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக மிகப்பெரிய அலை வீசுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரி வித்தார்.
சிவகங்கையில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசுக்கு மாநில அரசு கொத்தடிமையாக உள்ளது. கூவத்தூரில் என்ன நடந்தது என் பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
தாங்கள் இஸ்லாமிய மக்க ளுக்கு இணக்கமானவர்கள் என்பது போல முதல்வர் பேசு கிறார். ஆனால் இஸ்லாமிய மக் களுக்கு எதிரான குடியுரிமைச் சட் டத்துக்கு ஆதரவளித்தது அவர் கள்தான்.
தமிழகத்தில் மிகப்பெரிய அலை உருவாகியுள்ளது. அது 10 ஆண்டு கால அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எதிரான அலை. எங்களுக்கு கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கை இல்லை. கருத்து கணிப்பில் வந்ததைவிட அதிக இடங்களில் எங்களது கூட் டணி வெற்றி பெறும்.
கரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தால் அது ஜனநாயகப் படுகொலை. அதி முக வேட்பாளர்கள் வித்தியாச மாக பிரச்சாரம் செய்வதை மக் கள் கேலி செய்கின்றனர்.
தமிழக மக்கள் மோடியை விரும்பவில்லை. மோடி எந்த அளவுக்குப் பிரச்சாரம் செய்கி றாரோ, அந்த அளவுக்கு எங் களின் வெற்றி எண்ணிக்கை கூடும், என்று கூறினார்.
சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.குணசேகரன், மாவட்டச் செய லாளர் கண்ணகி ஆகியோர் உட னிருந்தனர்.