ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா பாளை.யில் தெரு மூடல் :

பாளையங்கோட்டையில்  ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து,  அவர்கள் வசிக்கும் தெரு அடைக்கப்பட்டுள்ளது. படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டையில் ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் வசிக்கும் தெரு அடைக்கப்பட்டுள்ளது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது. பாளையங் கோட்டையில் முனையாடு நாயனார் தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வீட்டிலுள்ள ஒருவர் சமீபத்தில் சென்னையிலிருந்து வந்திருந்தார். இந்நிலையில் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் மனக்காவலம் பிள்ளை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாளையங்கோட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான ஊழியர்கள் அந்த தெருவை அடைத்து, கிருமி நாசினி தெளித்தனர்.

திருநெல்வேலி வண்ணார் பேட்டை பேருந்து நிறுத்தம், நெல்லையப்பர் கோயில் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தென்காசி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in