

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்காக தேர்தல் சிறப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலில் பணியாற்ற 113 மண்டல அலு வலர்கள், 113 உதவி மண்டல அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 15 மண்டல அலுவலர்கள் மற்றும் 26 உதவி மண்டல அலுவலர்கள் முதல் முறையாக தேர்தலில் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்காக பிரத்யேக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
முதல் முறையாக தேர்தலில் மண்டல அலுவலர்களாக பணியாற்ற உள்ளவர்கள் வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் பொருத்தும் பணிகள் ஒவ்வொரு வட்டத்திலும் நடை பெற உள்ளது. அங்கு, மண்டல அலுவலர்களும், உதவி மண்டல அலுவலர்களும் உரிய ஆலோசனைகளை வழங்கி அப்பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு நாளில் மாதிரி வாக்குப்பதிவை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் செய்ய வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதாக கையாளும் வகையில் முழுமை யாக அதை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இங்கு அளிக்கப்படும் பயிற்சி யில் அனைத்து தகவல்களையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, திருப்பத்தூர் மாவட் டத்தில் 4 தொகுதிகளிலும் சிறப்பாக வாக்குப்பதிவு நடைபெற மண்டல அலுவலர்களும், உதவி மண்டல அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.