Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேற்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
நேற்று காலை மருதமலை அடிவாரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அருண்குமார், தொடர்ந்து சோமையம்பாளையம், பன்னிமடை, சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச்சென்று, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக தேர்தல் அறிக் கையில் அறிவிக்கப்பட்டுள்ள, வீடுகளுக்கு 6 காஸ் சிலிண்டர்கள், இலவச கேபிள் இணைப்பு திட்டம், குலவிளக்கு திட்டம், உழவு மானியம், 2 ஜிபி டேட்டா, வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், பேருந்து பயண சலுகைகள், மின் கட்டண சலுகை குறித்து விளக்கியதுடன், இதுபோன்ற திட்டங்கள் மூலமாக ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் சேமிக்கலாம் என்று விளக்கினார். மேலும், ஏற்கெனவே அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், மக்களின் கோரிக்கைகளைத் தீர்க்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் கூறி, வாக்கு சேகரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT