

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்ததால், சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.33 ஆயிரத்து 696-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா ஊரடங்கு தளர்வால் பல்வேறு தொழில்கள் கடந்த சில மாதங்களாக மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால், கடந்த சில வாரங்களாக சர்வதேச அளவில் தங்கம் விலை குறையும் போதெல்லாம், உள்ளூரிலும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.33 ஆயிரத்து 696-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 212-க்கு விற்பனை ஆனது. இதுவே நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 250-க்கு விற்கப்பட்டது.