பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் - கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் :

விழுப்புரத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அண் ணாதுரை பேசியது:

மாவட்டத்தில் உள்ள 2,368 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நாளன்று அனைத்து வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கப்படவுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கை கழுவும் திரவம் மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி பயன்படுத்தப்படவுள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்கும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் அமைத்துபொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,கரைசல் பவுடர், நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகக்கனி, துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in