

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 115 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏப். 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள தால், அரசு கட்டிடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் உரிய காலஅவகாசம் கொடுக்கப்பட்டு, 7 ஆயிரத்து 102 விளம்பரங்கள் அகற்றப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உரிய அனுமதி பெறாமலும், பொது இடங்களில் தேர்தல் விதிகளை மீறி விளம்பரங்கள் எழுதிய கட்சியினர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் 29, ஓசூரில் 20, பர்கூரில் 24, தேன்கனிக்கோட்டையில் 24, ஊத்தங்கரையில் 18 என 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகள் குற்றவியல் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.