

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (23-ம் தேதி) பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரியில் இன்று காலை 9 மணிக்கு திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், பர்கூர் மதியழகன், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் பிரகாஷ், தளி இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சூளகிரி பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.