Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் - 23 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 489 வேட்பாளர்கள் போட்டி : கரூரில் அதிகபட்சமாக 77 பேர் போட்டி

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரிய லூர், புதுக்கோட்டை மாவட்டங் களில் உள்ள 23 தொகுதிகளில் 489 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாளான நேற்று மாலை 3 மணிக்குப் பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டி யிட தாக்கல் செய்யப்பட்டு வேட்பு மனு பரிசீலனையில் ஏற்றுக் கொள் ளப்பட்ட 172 மனுக்களில் 13 மனுக் கள் நேற்று திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து 159 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில், மணப்பாறை தொகுதி யில் ஆர்.சந்திரசேகர்(அதிமுக), ப.அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), ப.கிருஷ்ணகோபால் (தேமுதிக), ப.கனிமொழி(நாம் தமிழர்), கு.உமாராணி(ஐஜேகே) உட்பட 22 வேட்பாளர்களும், ரங்கம் தொகுதியில் கு.ப.கிருஷ் ணன்(அதிமுக), எம்.பழனியாண்டி (திமுக), ஆர்.சாருபாலா தொண் டைமான்(அமமுக), செல்வரதி (நாம் தமிழர்), பிரான்சிஸ் மேரி (ஐஜேகே) உள்ளிட்ட 15 வேட்பா ளர்களும் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு(திமுக), வீ.பத்ம நாபன்(அதிமுக), ஆர்.அப்துல்லா ஹசன்(எஸ்டிபிஐ), எம்.அபுபக்கர் சித்திக்(மநீம), வீ.வினோத்(நாம் தமிழர்) உட்பட 13 பேரும், திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி என்.நடராஜன்(அதிமுக), எஸ்.இனிகோ இருதயராஜ்(திமுக), ஆர்.மனோகரன்(அமமுக), ஆர்.பிரபு(நாம் தமிழர்), டி.வீரசக்தி (மநீம) உட்பட 18 பேரும், திருவெறும்பூர் தொகுதியில் ப.குமார்(அதிமுக), அன்பில் மகேஷ் பொய்யாமொழி(திமுக), எஸ்.செந்தில்குமார்(தேமுதிக), எம்.முருகானந்தம்(மநீம), வே. சோழசூரன் (நாம் தமிழர்) உட்பட 15 பேரும் களத்தில் உள்ளனர்.

லால்குடி தொகுதியில் சவுந்தர பாண்டியன்(திமுக), டி.ஆர்.தர்ம ராஜ்(தமாகா), விஜயமூர்த்தி (அமமுக), மலர் தமிழ்பிரபா (நாம் தமிழர்) உட்பட 14 பேரும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் மு.பரஞ்ஜோதி (அதிமுக), எஸ்.கதிரவன் (திமுக), எம்.ராஜ சேகரன் (அமமுக), வீ.கிருஷ்ணசாமி(நாம் தமிழர்), ஆர்.சாம்சன் (மநீம) உட்பட 29 பேரும், முசிறி தொகுதியில் செல்வராஜ் (அதிமுக), ந.தியாகராஜன்(திமுக), குமார்(தேமுதிக), கோகுல் (மநீம), தேவி இளங்கோவன் (நாம் தமிழர்) உட்பட 20 பேரும், துறையூர் தொகுதியில் டி. இந்திராகாந்தி(அதிமுக), எஸ்.ஸ்டாலின் குமார்(திமுக), கே.சுப்பிரமணியன் (அமமுக), ஆர்.தமிழ்ச்செல்வி (நாம் தமிழர்), டி.என்.யுவராஜன் (மநீம) உட்பட 13 பேரும் போட்டி யிடுகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டு வேட்புமனு பரிசீ லனையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 172 மனுக்களில் 13 மனுக்கள் நேற்று திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து 159 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 161 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதனால், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (அதிமுக), வி.செந்தில்பாலாஜி (திமுக), தங்கராஜ்(தேமுதிக), சு.மோகன்ராஜ் (மநீம), கருப்பையா (நாம் தமிழர்) உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேரும், அரவக்குறிச்சியில் அண்ணாமலை (பாஜக), என்.ஆர்.இளங்கோ (திமுக), பிஎஸ்என் தங்கவேல் (அமமுக), முகமது ஹனீப் ஷகில் (மநீம), அனிதாபர்வீன்(நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 40 பேரும் களத்தில் உள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் என்.முத்துகுமார் (அதிமுக), சிவகாமசுந்தரி (திமுக), மா.கதிர்வேல்(தேமுதிக), வே.சரவ ணன்(மநீம), இலக்கியா (நாம் தமிழர்) உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 26 பேரும், குளித்தலையில் என்.ஆர்.சந்திரசேகர்(அதிமுக), ரா.மாணிக்கம்(திமுக), வி.நிரோஷா (அமமுக), எஸ்.மணிகண்டன் (இந்திய ஜனநாயக கட்சி), சீனி.பிரகாஷ்(நாம் தமிழர்) உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 18 பேரும் போட்டியிடுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்ப லூர்(தனி) தொகுதியில் இரா.தமிழ்ச்செல்வன்(அதிமுக), ம.பிரபாகரன் (திமுக), கி.ராஜேந்திரன் (தேமு திக), எம்.சசிகலா (இந்திய ஜன நாயக கட்சி), மு.மகேஸ்வரி (நாம் தமிழர்), டி.ராதிகா(புதிய தமிழகம்), க.ராஜேந்திரன் (பகுஜன் சமாஜ்), அ.குண சேகரன் (தேசியவாத காங்கிரஸ்), சு.சதீஷ்(சுயேச்சை) ஆகிய 9 பேரும், குன்னம் தொகுதியில் ஆர்.டி.ராமச்சந்திரன் (அதிமுக), எஸ்.எஸ்.சிவசங்கர்(திமுக), ச.கார்த்திகேயன்(அமமுக), ப.அருள்(நாம் தமிழர்), ச.பாண்டியன்(பகுஜன் சமாஜ்), சை.சாதிக் பாட்ஷா(மநீம), ராவணன் (நியூ ஜெனரேசன்ஸ் பீப்பிள் பார்ட்டி) மற்றும் 15 சுயேச்சைகள் என 22 பேரும் போட்டியிடுகின்றனர்.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தாமரை எஸ்.ராஜேந்திரன்(அதிமுக), கு.சின்னப்பா (மதிமுக), துரை.மணிவேல் (அமமுக), ஜவகர்(ஐஜேகே), வே.சவரி ஆனந்தம்(பிஎஸ்பி), சுகுணாகுமார் (நாம் தமிழர்), தங்க.சண்முகசுந்தரம்(புதிய தலைமுறை மக்கள் கட்சி) மற்றும் 6 சுயேச்சைகள் என 13 வேட்பாளர்களும், ஜெயங் கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் கே.பாலு(பாமக), க.சோ.க.கண்ணன்(திமுக), நீல.மகாலிங்கம்(நாம்தமிழர்), க.நடராஜன்(அண்ணா திராவிடர் கழகம்), சொர்ணலதா(ஐஜேகே), கொ.சிவா(அமமுக), க.நீலமேகம் (பிஎஸ்பி) மற்றும் 7 சுயேச்சைகள் என 13 வேட்பாளர்களும் போட்டி யிடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் ஏற்றுக்கொள் ளப்பட்ட 123 வேட்புமனுக்களில் 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டதை யடுத்து மொத்தம் 112 பேர் களத் தில் உள்ளனர்.

இதில், கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் எம்.சின்னத் துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), எஸ்.ஜெயபாரதி(அதிமுக), பி.லெனின்(அமமுக), கே.ஆதி திராவிடர்(மநீம), பி.ரமிளா(நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் 6 பேர் உட்பட 14 பேரும், விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர் (அதிமுக), எம்.பழனியப்பன் (திமுக), ஓ.கார்த்தி பிரபாகரன் (அமமுக), ஆர்.சரவணன்(மநீம), அழகுமீனா(நாம் தமிழர்) உட்பட 22 பேரும் போட்டியிடுகின்றனர்.

புதுக்கோட்டை தொகுதியில் வி.முத்துராஜா(திமுக), வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான்(அதி முக), எம்.சுப்பிரமணியன் (தேமு திக), எஸ்.மூர்த்தி (மநீம), சசிகுமார் (நாம்தமிழர்) உட்பட 21 பேரும், திருமயத்தில் எஸ்.ரகுபதி(திமுக), பி.கே.வைரமுத்து(அதிமுக), உ.சிவராமன்(நாம்தமிழ்), ரா.திரு மேனி(மநீம), சு.முனியராஜூ(அம முக), சுயேச்சை 14 உட்பட 22 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ.மெய்யநாதன்(திமுக), தர்ம.தங்கவேல்(அதிமுக), டி.விடங்கர்(அமமுக), சி.திருச்செல்வம்(நாம்தமிழர்), நா.வைரவன்(மநீம) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் உட்பட 11 பேரும், அறந்தாங்கியில் டி.ராமச்சந்திரன்(காங்கிரஸ்), மு.ராஜநாயகம்(அதிமுக), க.சிவசண்முகம்(அமமுக), பி.சேக் முகமது(மநீம), ஹூமாயுன் கபீர் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சை 12 பேர் என 22 பேரும் போட்டி யிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x