Published : 23 Mar 2021 03:15 AM
Last Updated : 23 Mar 2021 03:15 AM

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முதல்கட்ட பயிற்சி :

தென்காசி வ.உ.சி வட்டார நூலகம் மற்றும் தென்காசி அபெக்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கியது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அபெக்ஸ் அகாடமி இயக்குநர் ராமசுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அடுத்து வர உள்ள அனைத்து அரசுத் துறை தேர்வுகளுக்கும் பயிற்சி முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கிளை நூலகர் சுந்தர் மற்றும் அகாடமி பயிற்றுநர்கள், நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஷா, ராஜேஸ்வரி மற்றும் வாசகர் வட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x