சேலம் மாவட்டத்தில் 412 வேட்புமனு தாக்கல் :

சேலம் மாவட்டத்தில் 412 வேட்புமனு தாக்கல் :
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்ளிட்டோர் மொத்தம் 412 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மாவட்டத்தின் 11 தொகுதிகளிலும் மொத்தம் 412 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக மேட்டூர் தொகுதியில் 73 வேட்புமனுக்களும், முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 48 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கெங்கவல்லியில் 24, ஆத்தூரில் 21, ஏற்காட்டில் 24, ஓமலூரில் 38, சங்ககிரியில் 35, சேலம் மேற்கில் 39, சேலம் வடக்கில் 36, சேலம் தெற்கில் 39, வீரபாண்டியில் 35 என மாவட்டத்தின் 11 தொகுதிகளிலும் மொத்தம் 412 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in