சிங்காநல்லூரில் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் வாக்கு சேகரிப்பு :

சிங்காநல்லூரில் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் வாக்கு சேகரிப்பு :
Updated on
1 min read

சிங்காநல்லூரில் உள்ள வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனை அருகிலிருந்து நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், பொதுமக்கள், வணிகர்கள், சாலையோர வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். திமுகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார். மேலும், கோவை, திருப்பூர், மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா), தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு திரட்டினார். வரதராஜபுரத்தில் உள்ள தனியார் அரங்கில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில், வேட்பாளர் நா.கார்த்திக், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in