

மேட்டூர் அணை நீர்மட்டம்101.13 அடியானது. மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி 99.32 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நவம்பர் 27-ம் தேதி நீர்மட்டம் 100 அடியை எட்டியது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 111 நாட்களாக அணை நீர்மட்டம் 100 அடியாக நீடித்து வருகிறது.
அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 33 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 101.13 அடியாகவும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.