பொன்முடி குறித்து அவதூறு எஸ்பியிடம் புகார் மனு :

பொன்முடி குறித்து அவதூறு  எஸ்பியிடம் புகார் மனு :
Updated on
1 min read

திருகோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக விழுப்புரம் எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது,

திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொன்முடிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்டு வருகின்றனர். பொன்முடி சொல்லாதஒரு கருத்தினை, பொய்யாக உருவாக்கி தேர்தல் சமயத்தில் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார்கள். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது. இது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவைபெற்றுக்கொண்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீஸார் மூலம், அவதூறு பரப்பியவர்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஒரு கருத்தினை, பொய்யாக உருவாக்கி தேர்தல் சமயத்தில் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in