செல்போன் எண்ணை இணைக்க ஆதார் முகாம் இன்று தொடக்கம் :

செல்போன் எண்ணை இணைக்க ஆதார் முகாம் இன்று தொடக்கம்  :
Updated on
1 min read

திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அஞ்சல்துறை சார்பில்ஆதார் பதிவு மற்றும் திருத்தம்ஆகிய சேவைகள் அஞ்சலகங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சுகாதாரத்துறையின் கரோனா தடுப்பூசி பதிவு செய்யும் தளத்தில் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் முறை பயன்படுவதால், அனைவரும் மொபைல் எண்ணைஆதாரில் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக இன்று (18-ம் தேதி) தொடங்கி வரும்20-ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகங்கள் மற்றும் ஆழ்வார்குறிச்சி, சேரன்மகாதேவி, கடையம்,கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், விக்கிரமசிங்கபுரம், வீரவநல்லூர், ஏர்வாடி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, பணகுடி, ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர், மகாராஜ நகர், மானூர், மேலப்பாளையம், பெருமாள்புரம், சங்கர்நகர், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி டவுன், பேட்டை, வண்ணார்பேட்டை, பாபநாசம் மில்ஸ், பத்தமடை, இடையன்குடி, மருதகுளம், சமூகரெங்கபுரம், தெற்கு கருங்குளம், வடக்கன்குளம் ஆகிய அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும்தெய்வநாயகப்பேரி கிளை அஞ்சலகத்தில் இன்றும், கடம்பன்குளம் கிளை அஞ்சலகத்தில் நாளையும் (19-ம் தேதி), ரெட்டியார்பட்டி கிளை அஞ்சலகத்தில் வரும் 20-ம் தேதியும், தருவை கிளை அஞ்சலகத்தில் வரும் 22-ம் தேதியும், கூடங்குளம் கிளை அஞ்சலகத்தில் 19, 20-ம் தேதிகளிலும் சிறப்பு முகாம் அஞ்சல்துறையால் நடத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in