Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

வனத்தில் இரு யானைகள் உயிரிழப்பு :

கோவை/பொள்ளாச்சி: கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அட்டுக்கல் பழங்குடியின கிராமத்தையொட்டிய வனப் பகுதியில் பழங்குடியின பெண் ஒருவர், குட்டி யானையின் சடலம் இருப்பதை நேற்றுமுன்தினம் பார்த்துள்ளார். இதுதொடர்பாக வனச் சரகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவ அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக வனத் துறையினர் கூறும்போது, “பெண் யானைக் குட்டிக்கு சுமார் 2 முதல் 3 வயது இருக்கலாம். சரிவான பாறையில் இருந்து வழுக்கி விழுந்ததில் மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த யானை நான்கு நாட்களுக்கு முன்பு இறந

வால்பாறை வனச் சரக பகுதியில் இரண்டு ஆண் யானைகள் ஒன்றுக்கொன்று தந்தத்தால் தாக்கிக்கொண்டதில் ஓர் ஆண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநரின் உத்தரவுப்படி, வால்பாறை வனச் சரகர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அதிகாரிகள் முன்னிலையில் வனத் துறை கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x