

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி பேரணியை தொடங்கி வைத்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து பாரிமுனை வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
பேரணியில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் `எனது வாக்கு, எனது உரிமை' போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், இரு சக்கர வாகனத்தின் முன்பும் ஒட்டியிருந்தனர்.
முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதாக உறுதி மொழி அளித்து கையெழுத்திடும் இயக்கத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதாக உறுதி மொழி அளித்து கையெழுத்திட்டனர்.