3 சக்கர சைக்கிளில் - மனுதாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் :

3 சக்கர சைக்கிளில் -  மனுதாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்  :
Updated on
1 min read

இந்து தேசிய கட்சி திருநெல்வேலி மாவட்ட தலைவர் சங்கரநாராயணன். இவர் அக் கட்சியின் நிறுவனர் தலைவர் எஸ்எஸ்எஸ் மணி மற்றும் நிர்வாகிகளுடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு 3 சக்கர சைக்கிளில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவர்கள் அனைவரும் கைகளில் வேப்பிலை, மாவிலைகளை வைத்திருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு 3 சக்கர சைக்கிளில் வந்தது குறித்து மணி கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக கொள்கையற்ற கூட்டணி வைத்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் 3 சக்கர சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்கிறோம். கொள்கையற்ற கூட்டணியை நினைவுபடுத்தும் வகையில் மாங்குலையுடனும், மோசமான அரசியல் கட்சிகள் ஒழிய வேண்டி வேப்பிலையுடனும் வந்துள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in