

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம் கிராமத்தில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப்பட்டி, செட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் அதனை நிறுத்தி விட்டனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும். நகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறினார்.