வீரபாண்டியில் இன்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் :

வீரபாண்டியில் இன்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் :
Updated on
1 min read

வீரபாண்டி, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று (16-ம் தேதி) சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் மற்றும் ஏற்காடு தொகுதி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

பின்னர், நாமக்கல் மாவட்டதுக்கு செல்லும் ஸ்டாலின், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஸ்டாலின் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in