

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே வெள்ளக்கல்பட்டியில் பசிறுமலை அமைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை பசிறுமலை பகுதியில் உள்ள மரங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளனெ வனப்பகுதி முழுவதும் பரவியது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், காட்டுத் தீ காரணமாக தீயணைப்பு துறையினரால் மலைப்பகுதிக்கு செல்ல இயலவில்லை. இதனால், மலையில் உள்ள 70 சதவீதம் மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.