ஈரோட்டில் உரிய ஆவணம் சமர்ப்பிப்பால் - சோதனையில் பறிமுதலான ரூ.15.72 லட்சம் விடுவிப்பு :

ஈரோட்டில் உரிய ஆவணம் சமர்ப்பிப்பால் -  சோதனையில் பறிமுதலான ரூ.15.72 லட்சம் விடுவிப்பு :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டதால், தேர்தல் பறக்கும் படையினர் 12 வழக்குகளில் பறிமுதல் செய்த ரூ.15 லட்சத்து 72 ஆயிரம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடும் தேர்தல் பறக்கும் படை மற்றும் சிறப்பு குழுக்களைச் சேர்ந்தோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதன்படி, ஈரோடு மாவட்டத் தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், உரிய ஆவணங் கள் இன்றி பணம் எடுத்துச் சென்றது தொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.50 லட்சத்து 94 ஆயிரத்து 410 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், 12 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டதன் அடிப்படையில், ரூ.15 லட்சத்து 72 ஆயிரம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலுவையில் உள்ள 18 வழக்குகளில் தொடர்புடைய ரூ.35 லட்சத்து 22 ஆயிரத்து 410 அரசு கருவூலத்தில் வைக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in