எம்.பி ஜோதிமணி மீது நடவடிக்கை கோரி - கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை கண்டித்து தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள காந்தி சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.படம்: க.ராதாகிருஷ்ணன்
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை கண்டித்து தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள காந்தி சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.படம்: க.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

கட்சித் தலைமை மீது குற்றஞ் சாட்டியுள்ள கரூர் எம்.பி ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூரில் காங்கிஸார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைமை மீது குற்றஞ்சாட்டியுள்ள கரூர் எம்.பி செ.ஜோதிமணியை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் கரூர் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் அருகே காந்தி சிலை முன் நேற்று காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in