சேலத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் உட்பட 6 பேருக்கு கரோனா :

சேலம் அரிசிப்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வீதிக்கு சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated on
1 min read

சேலம் அரிசிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி மாநகர நல அலுவலர் பார்த்திபன் கூறியதாவது:

சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினருக்கு நடந்த கரோனா பரிசோதனையில் குடும்பத்தில் உள்ள 6 பேர்களில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து, அந்த வீதியில் வசிக்கும் 60 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீதிக்கு சீல் வைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in