

மாசி அமாவாசையை முன்னிட்டு, சேலம் உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை அதிகரித்தது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகரித்து இருந்தது. விற்பனை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.