திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் - முதுகலைத் தமிழில் முதலிடம் பிடித்த ஆர்.கே.எஸ். கல்லூரி மாணவி :

முதலிடம் பிடித்த மாணவி குமுதவள்ளி.
முதலிடம் பிடித்த மாணவி குமுதவள்ளி.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்ற உ.குமுதவள்ளி என்ற மாணவி திருவள் ளுவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழ கத்தில் பட்டமளிப்பு விழா வேலூரில் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவிற்காக பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றோரின் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் ஆர்.கே.எஸ் கல்லூரியில் முதுகலை தமிழ் பயின்ற உ.குமுதவள்ளி என்ற மாணவி திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

பல்கலைக் கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவியை கல்லூரித் தலைவர் மருத்துவர். க.மகுடமுடி மற்றும் நிர்வாக குழுவினரும், முதல்வர் கு.மோக னசுந்தர், துணைமுதல்வர் பெ.ஜான்விக்டர் உள்ளிட்ட உதவிப் பேராசிரியர்களும் பாராட்டினர். மாணவர்களுக்கு நல்விதத்தில் பயிற்சி அளித்த தமிழ்த் துறைத் தலைவி உட்பட உதவிப் பேராசி ரியர்களை நிர்வாகக் குழுவினர் வாழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in