தஞ்சாவூர் மாவட்டத்தில் அமாவாசை தினத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர்கள் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமாவாசை தினத்தில்  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர்கள் :
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிட்டதை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அமாவாசை தினமான நேற்று, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி களின் வேட்பாளர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் அறிவுடை நம்பி ஆகியோர், தஞ்சாவூரில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகி யோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பிரச்சாரத்தை நேற்று தொடங்கினர்.

இதேபோல, கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் தொகு தியில் உள்ள கட்சியின் மூத்தத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பிரச்சாரத்தை தொடங்கினார். திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன், கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு திரட்டியதுடன், பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

இதேபோல, அமமுக வேட் பாளர்கள் பாபநாசம் எம்.ரங்கசாமி, ஒரத்தநாடு ம.சேகர், கும்பகோணம் பாலமுருகன் ஆகியோர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை அந்தந்த தொகுதிகளில் தொடங்கினர். நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் இரா.சுபா தேவி நேற்று முக்கிய வீதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேக ரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in