Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 12 தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாகப் போட்டியிடுகின்றன.
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய 7 தொகுதிகளில் திமுக,அதிமுக நேரடியாகப் போட்டியிடுகின்றன.
சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., அதிமுக சார்பில் முன்னாள் மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம், கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் பையா என்ற ஆர்.கிருஷ்ணன், அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் வ.மா.சண்முகசுந்தரம், அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ., தொண்டாமுத்தூரில் திமுக சார்பில் மாநில சுற்றுச்சூழல் அணிச் செயலர் கார்த்திகேய சிவசேனாதிபதி, அதிமுக சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் டி.ஆர்.சண்முகசுந்தரம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ், கிணத்துக்கடவில் திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், பொள்ளாச்சியில் திமுக சார்பில் மருத்துவர் வரதராஜன், அதிமுக சார்பில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன், அதிமுகசார்பில் மாவட்டச் செயலர் கப்பச்சி வினோத், கூடலூரில் திமுக சார்பில் காசிலிங்கம், அதிமுக சார்பில் பொன். ஜெயசீலன், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் ஏ.எஸ். ராமலிங்கம், திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் க.செல்வராஜ், அதிமுக சாா்பில் குணசேகரன் எம்.எல்.ஏ., மடத்துக்குளம் தொகுதியில் திமுக சார்பில் ஜெயராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலர் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
3 பேருக்கு வாய்ப்பு மறுப்பு
கோவையில் மாநகர் கிழக்குமாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ள நிலையில், கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோருக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பையா என்ற ஆர்.கிருஷ்ணன், குறிச்சி பிரபாகரன் ஆகியோர் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தனர். தற்போது 2-வது முறையாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் கோவை தெற்கு, சூலூர், வால்பாறை ஆகிய தொகுதிகள் முறையே காங்கிரஸ், கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT