Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

தேர்தல் பணியில் ஈடுபட - முன்னாள் காவலர், ராணுவ வீரர்களுக்கு அழைப்பு :

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட,நல்ல உடல் நலத்துடன் உள்ளஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள்,காவலர்கள் மற்றும் முன்னாள்ராணுவ வீரர்கள் அழைக்கப்படுகின்றனர்.இப்பணியில் ஈடுபட விரும்புவோர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவைத் தொடர்புகொண்டு, தங்களது ஒப்புதலைத் தெரிவிக்கலாம். மேலும், தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் இரு நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவை நேரிலோ அல்லது 94981-70685 என்ற செல்போன் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x